அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் | கைது செய்ய வந்த போலீசார் என்னுடன் மது அருந்தி விட்டு சென்றார்கள் ; ராம்கோபால் வர்மா கிண்டல் | ஏர்போர்ட்டில் தடையின்றி செல்ல தந்தையின் சலுகைகளை ரன்யா ராவ் பயன்படுத்தினார் ; அறிக்கை சமர்ப்பிப்பு | சூர்யா வீட்டில் நட்சத்திர பார்ட்டி ; திரிஷா ஆஜர் | எம்புரான் சர்ச்சை குறித்து கருத்து சொல்ல சுரேஷ்கோபி மறுப்பு | முதல் முறையாக இரண்டு வேடங்களில் அல்லு அர்ஜுன் |
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சர்தார் 2'. 2022ல் வெளிவந்த முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். ஆனால், இரண்டாவது பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக நியமித்தனர்.
இதனிடையே, தற்போது இப்படத்திலிருந்து யுவனை நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக அவரைத் தொடர்பு கொள்ள முயலும் போதெல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகச் சொல்கிறார்கள். யுவன் சென்னையை விட்டு துபாயில் செட்டிலாகிவிட்டார். அவரிடம் பாடல்களைக் கேட்டு வாங்குவதில் அவ்வளவு சிரமமாக உள்ளதாம்.
'சர்தார் 2' நீண்ட நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லையாம். அதனால், இப்போது சாம் சிஎஸ்-ஐ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.
விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாம். அப்போது அதற்கு யார் இசையமைத்துள்ளார்கள் என்பது தெரிந்துவிடும்.