‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது |
ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள இந்தி படம் 'பரம் சுந்தரி'. துஷர் ஜாலோட்டா இயக்கி உள்ள இந்த படத்திற்கு சச்சின் ஜிஹர் இசை அமைத்துள்ளார். சஞ்சய் கபூர், ரஞ்சி பணிக்கர், மன்ஜத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். கேரளாவை கதை களமாக கொண்டு உருவாகி உள்ள இந்த படம் வருகிற 29ம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் நாயகனும், நாயகியும் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றது. இதற்கு பல கிறிஸ்தவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
வாட்ச்டாக் அறக்கட்டளை என்ற அமைப்பு, கத்தோலிக்க சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி, அக்காட்சியினை படத்தில் இருந்து மட்டுமல்லாமல், டிரைலர் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட அதன் விளம்பரப்படுத்தும் அனைத்திலிருந்தும் நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி நீக்க தவறினால் போராட்டம் நடத்துவோம் என்றும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக, மும்பை காவல்துறை, மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் மஹாராஷ்டிரா அரசுக்கு அந்த அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் பட தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர படத்தில் மலையாளியாக நடித்துள்ள ஜான்வி கபூர் பேசும் மலையாளத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.