இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு மீண்டும் சினிமாவில் புதிய படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்தியன்-2 படத்தில் அவர் நடித்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது காட்சிகள் அனைத்தும் இந்தியன்-3 படத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. இந்த நிலையில் ஹிந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள சிக்கந்தர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும், சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ள நிலையில் காஜல் அகர்வால் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். இந்த சிக்கந்தர் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றபோது ஹீரோயினிக்கு இணையான கிளாமர் உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார் . அது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதையடுத்து தெலுங்கில் கண்ணப்பா என்ற படத்தில் பார்வதி தேவி வேடத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், தி இந்தியா ஸ்டோரி என்ற ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்.