சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி தனது 46வது வயதில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோவிலில் எளிமையான முறையில் அவர்கள் திருமணம் நடைபெற்றது. தங்களது புகைப்படத்தின் மூலம் திருமணம் செய்து கொண்டதை அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
இந்நிலையில் தான் கர்ப்பமானதை அடுத்து நடித்து வந்த சீரியலில் இருந்து வெளியேறினார் சங்கீதா. அதையடுத்து சங்கீதாவுக்கு பூச்சூடல் விழா நடைபெற்ற நிலையில், தற்போது நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளார் ரெடின் கிங்ஸ்லி. இந்த நிகழ்ச்சியில் சினிமா, சின்னத்திரை நடிகர் நடிகைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு அவர்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.