ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஜி.வி.பிரகாஷ் குமாரின் 25வது படமான கிங்ஸ்டன் சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி அதிர்ச்சி தோல்வியை கொடுத்தது. அந்த படத்தை அடுத்து இடி முழக்கம், 13 போன்ற படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், ‛பிளாக் மெயில்' என்ற படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார். மு.மாறன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
பெரும்பாலும் ஜி.வி பிரகாஷ் குமார் நடிக்கும் படங்களுக்கு அவரே இசையமைத்த போதும், சர்வம் தாள மயம் படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மானும், சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்கு சித்துகுமார் ஆகியோர் இசையமைத்த நிலையில், தற்போது இந்த பிளாக் மெயில் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகிறது.