ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் |
கூலி படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர்-2 படத்தில் கடந்த சில மாதங்களாகவே நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் எஸ்.ஜே. சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் மற்றும் கெஸ்ட் ரோலில் பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள். ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்த நிலையில், தற்போது இந்த ஜெயிலர் 2 படத்தில் இன்னொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு விக்ரம் நடித்து வெளியான வீர தீர சூரன் படத்தில் எஸ்.ஜே .சூர்யாவிற்கு அடுத்தபடியாக இன்னொரு வில்லனாக நடித்திருந்தார். அதையடுத்து தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.