‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி |
நாயகன் படத்தில் இணைந்த கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி, நீண்ட இடைவெளிக்கு பிறகு தக் லைப் படத்தில் இணைந்தார்கள். மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் அதிர்ச்சி தோல்வியாக அமைந்துவிட்டது. அந்த வகையில் இந்தியன் 2, தக் லைப் என்ற இரண்டு படங்களின் தோல்வியினால் அடுத்தபடியாக அன்பறிவ் இயக்கத்தில் தான் நடிக்கும் படத்தின் ஸ்கிரிப்டை மாற்றம் செய்ய சொல்லி இருந்தார் கமல்ஹாசன்.
இப்படியான நிலையில், கமலின் மகளான நடிகை ஸ்ருதிஹாசன் அளித்த ஒரு பேட்டியில், தக்லைப் படத்தின் தோல்வி கமலின் மனதை பாதித்ததா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில், என் தந்தை கமல்ஹாசன் சினிமாவில் வெற்றி தோல்வி என நிறைய பார்த்து விட்டவர். அதனால் இந்த தோல்வி அவரை பாதிக்கவில்லை. அது மட்டுமின்றி அவர் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் மீண்டும் சினிமாவில்தான் போடுகிறார். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து புதிதாக வீடு கட்டுவது, கார்கள் வாங்குவது என்று அவர் ஆசைப்படுவதில்லை. அந்த வகையில் இதுபோன்ற நம்பர் கேம் அவரை ஒருபோதும் பாதிக்காது என்று கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.