கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தக்லைப்'. வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அனைத்து பாடல்களும் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'விண்வெளி நாயகா' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான இந்த பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். ராப் பகுதியை பிரசாத் வெங்கட் எழுத, ஏ.ஆர்.அமீன் பாடி உள்ளார். இந்த பாடல் கமல்ஹாசன், திரிஷாவின் ரொமான்டிக் பாடல் என்றும் கூறப்படுகிறது. விண்வெளி நாயகா, விடியல் வீரா, உயிரின் மேல் விரிந்திடவா வா என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த தகவல் மற்றும் புகைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.