ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

விடாமுயற்சி படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள குட் பேட் அக்லி என்ற படத்தை நடித்துள்ளார் அஜித். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் ஏப்ரல் பத்தாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நேரத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் அளித்துள்ள ஒரு பேட்டியில், அடுத்த படமும் அஜித் உடன் அமைந்தால் மகிழ்ச்சியே, இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க போகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
அதனால் கார் பந்தயம் முடிந்து அஜித் குமார் திரும்பியதும் அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே சிவா இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களில் நடித்த அஜித், வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தார். அதேப்போல் குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.