துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! |

இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் சிபிராஜ் நடித்துள்ள படம் ‛டென் ஹவர்ஸ்'. ஆக் ஷன் கலந்த கிரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே பொங்கல் வெளியீடு என அறிவிப்பு வந்தது. பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது ஏப்., 18ல் ரிலீஸ் என புதிய டிரைலரை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
டிரைலரில் ஒரு பேருந்தில் கொலை நடக்கிறது. அதையடுத்து 10 மணி நேரத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் கதையாக அமைந்திருக்கிறது. சிபி ராஜ் உடன் கஜராஜ், திலீபன், சிவா ரவி, சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளியாகும் அன்று தான் விஜய் நடித்த சச்சின் படமும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பதிவில், விஜய் படத்திற்கும் ஆதரவு கொடுப்போம். சிபிராஜ் படத்திற்கும் ஆதரவு கொடுப்போம் என்று கூறியுள்ளார்கள். இதற்கு விஜய் ரசிகர்களுக்கு ஒரு நன்றி தெரிவித்துள்ளார் சிபிராஜ்.