சிம்புவின் இரண்டு படங்களுக்கு இசை சாய் அபயங்கர்? | இன்று 'அமரன்' 100வது நாள் விழா | இன்றைய ரிலீஸ் - 10 படங்களில் 1 மட்டும் மிஸ்ஸிங் | இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் |
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் தற்போது டர்போ என்கிற படம் வெளியாகி உள்ளது. புலி முருகன் பட இயக்குனரும் ஏற்கனவே மம்முட்டியை வைத்து போக்கிரி ராஜா, மதுர ராஜா என்கிற இரண்டு படங்களை இயக்கியவருமான இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியுள்ளார். படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் டர்போ படக்குழுவுக்கும் நாயகன் மம்முட்டிக்கும் இந்த படம் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தனது தந்தை சத்யராஜ், மோகன்லால் மற்றும் மம்முட்டியுடன் 90களில் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.