கேரள மாநில விருது: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மம்முட்டி | ஒரே நேரத்தில் திரிஷ்யம் 3 மூன்று மொழிகளில் ரிலீஸா? : தெளிவாக குழப்பும் ஜீத்து ஜோசப் | 100 கோடி வசூலிக்குமா 'பாகுபலி தி எபிக்' | விஷால் மீது 'மகுடம்' முன்னாள் இயக்குனர் ரவி அரசு புகார் | மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசைப்படும் துருவ் | அஜித்துக்கு வில்லனாக நடிக்கலாமா? யோசிக்கும் விஜய்சேதுபதி | ராஷ்மிகாவின் 'மோதிர' ரகசியம்… | இந்தியன் 3 வருமா? வராதா? நாளை மறுநாள் தீர்வு கிடைக்குமா? | 7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! |

விஜய் நடித்த ‛புலி' படத்தை தயாரித்தவர் பி.டி. செல்வகுமார் இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் பி ஆர் ஓ ஆக, விஜய் மேனேஜராக இருந்தார். புலி பிரச்னைக்கு பின் அவரிடம் இருந்து ஒதுங்கினார். இப்போது கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பை ஆரம்பித்து, வரும் சட்டசபை தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்எல்ஏ பதவிக்கு போட்டியிட ஆசைப்படுகிறார்.
சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: விஜய் தந்தை எஸ் ஏ சந்திரசேகரனும் நானும் இணைந்து விஜயின் பல நிகழ்ச்சிகள், விழாக்களை நடத்தி இருக்கிறோம். பக்காவாக திட்டமிட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தினோம். அதனால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. ஆனால் அனுபவம் இல்லாதவர்கள் தவெக.,வில் இருப்பதால் கரூர் சம்பவம் நடந்துள்ளது. மற்றபடி விஜய் பற்றி நான் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. வரும் சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சி அல்லது வேறு கட்சி, ஏன் தவெக அழைத்தால் கூட அவருடன் இணைந்து சட்டசபை தேர்தலில் போட்டியிட தயார். விஜய்க்கு இப்போது அனுபவம் வாய்ந்தவர்கள் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.