வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் |
'கேஜிஎப்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான படம் 'சலார்'. இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகும் என்று அறிவித்தார்கள். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் சீக்கிரமே ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிரபாஸ் அடுத்தடுத்து சில படங்களில் பிஸியாக நடித்து வந்ததால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இதனிடையே, இரண்டாம் பாகத்தை டிராப் செய்ய உள்ளதாக கடந்த சில வாரங்களாக 'சலார் 2' பற்றி சில செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இயக்குனர் பிரசாந்த் நீல், பிரபாஸ் இடையே இரண்டாம் பாகக் கதையில் சில கருத்து மோதல்கள் ஏற்பட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஜுனியர் என்டிஆர் படத்தை உடனடியாக இயக்கும் முடிவிற்கு பிரசாந்த் நீல் சென்றதாக சொல்கிறார்கள். எனவே, 'சலார் 2' படம் டிராப் ஆவது உறுதி என டோலிவுட்டில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
இருவரையும் சமரசம் செய்து 'சலார் 2' படத்தை உருவாக்குவார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.