‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

சிபிராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'மாயோன்' திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு சிபிராஜ் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி நாயகிகளாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு வட்டம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் சிபிராஜ் மற்றும் ஆண்ட்ரியா இருவரும் இடம் பெற்றுள்ளனர். இந்த படம் நேரடியாகஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.