இத்தனை வயதிலும் பிகினியில் அசத்தும் ஸ்ரேயா | நான் உயிர் உள்ள மனுஷி - சாய் பல்லவி | மீண்டும் புத்துயிர் பெறும் 'சங்கமித்ரா' | சினிமாவில் வெற்றி தான் முக்கியம் : மணிகண்டன் | நீக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா விமர்சனம் : தனுஷ் நன்றி | முதல் 3 நாட்களில் 12 கோடி வசூலித்த கங்கனாவின் 'எமர்ஜென்சி' | 2025ல் ராஷ்மிகாவின் முதல் படம் பிப்ரவரி 14ல் வெளியாகிறது! | பிரேமலு 2ம் பாகம் அப்டேட் | காதலியை மணந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து | கவுதம் மேனன் இயக்கத்தில் ரவி மோகன் |
ஸ்டூடன்ட் நம்பர் ஒண் படத்தின் மூலம் 2003ம் ஆண்டு அறிமுகமான சிபிராஜ், திரைப் பயணத்தில் தனது 20வது ஆண்டை நெருங்குகிறார். இந்த நிலையில் அவரது 20வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த திரைப் பயணத்தில் ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாய்கள் ஜாக்கிரதை, நாணயம், ஜாக்சன் துரை, சத்யா, கட்டப்பாவ காணோம், கபடதாரி, வால்டர் படங்கள் முக்கியமானவை. தற்போது மாயோன், ரேன்ஞர், வட்டம் படங்களில் நடித்து வருகிறார்.
சிபிராஜின் 20வது படத்தை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் இயக்குகிறார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஹர்ஷவர்த்தன் இசை அமைக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குனர் பாண்டியன் ஆதிமூலம் கூறியதாவது : மொழி எல்லைகளை கடந்து உலகளாவிய ரசிகர்களை ஈர்க்கும் வகையிலான கதைக்கருவுடன் இப்படம் உருவாகிறது. இத்திரைப்படம் முதல் பாதியில் குடும்ப உணர்வுகளை பேசும்படியும், அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியில் கதாநாயகனுக்கும் எதிரிக்கும் இடையே ஆடு புலி ஆட்டமாக பரபரப்பான ஆக்சன் அதிரடி திரில்லர் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. என்றார்.