ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் | அங்கிளான என்னை அண்ணனாக மாற்றிவிட்டார் பஹத் பாசில் ; இயக்குனர் சத்யன் அந்திக்காடு பெருமிதம் |
நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் இயக்கும் படம் இறைவன் மிகப் பெரியவன். இதன் கதையை வெற்றிமாறன், எழுத்தாளர் தங்கம் இணைந்து எழுதியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது.
இதில் அமீர் பேசியதாவது: பாரதிராஜா நிறைய கதைகளை வெளியில் வாங்கி படம் இயக்குவார். ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது.
நானும் வெற்றிமாறனும் தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அப்போது அவரிடம் இருந்த இறைவன் மிகப்பெரியவன் கதையை நான் இயக்கட்டுமா என்று கேட்டேன். கண்டிப்பாக செய்யலாம் என்றார். அப்படித்தான் இந்த படம் தொடங்கியது.
இன்றைய காலகட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக படம் இயக்க வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், அல்லது தான் சார்ந்திருக்கும் கட்சி அடையாளங்களை முன் நிறுத்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. அதற்காக இந்த படத்தை இயக்க வேண்டும் என தோன்றியது.
மக்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். ஓட்டுக்காக மக்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும். என்றார்.