லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
இயக்குனரும், நடிகருமான சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமென்மேன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு அஞ்சல என்ற படத்தை இயக்கிய தங்கம் சரவணன் இயக்குகிறார். அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ்மோகன், அபிராமி ராகுல், ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், ராமி ஒளிப்பதிவு செய்கிறார். மோகன் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை.
படம் பற்றி இயக்குனர் தங்கம் சரவணன் கூறியதாவது: உலகம் முழுக்க அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படமாக இப்படம் இருக்கும். இது ஆக்சன், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படமாக இருக்கும். சசிகுமார் என்னுடைய முந்தைய படமான 'அஞ்சல' படம் பார்த்து, என்னுடைய முயற்சியை முழுமையாக பாராட்டினார். அவர் இந்த திரைக்கதையை கேட்டபோது, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் நிச்சயம் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். சசிகுமாரின் கேரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. அதை தாண்டியும், திரைக்கதையில் ஏராளமான ஆச்சர்யங்களும் உள்ளது. என்றார்.