பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் |
தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் பேரனும், இயக்குனர் விஜய், நடிகர் உதயா ஆகியோரின் சகோதரி மகனுமான ஹமரமேஷ், ‛ரங்கோலி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். இயக்குனர் வஸந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் நடைபெறும் என படக்குழு அறிவித்திருக்கிறது. படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். மருதநாயகம் ஒளிப்பதிவு செய்கிறார்.