25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

கவுதம் மேனன் இயக்கிய வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு வெடி, வேட்டை என சில படங்களில் நடித்தவர், பின்னர் மும்பையை சேர்ந்த அக்ஷய் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தாலும் கூட சோசியல் மீடியாவில் அவ்வப்போது பரபரப்பான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொண்டு வருகிறார் சமீரா ரெட்டி. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மாமியார் குறித்து மிகவும் சிலாகித்து பல தகவல்களை கூறியுள்ளார் சமீரா.
மாமியார் பற்றி அவர் கூறும்போது, “எங்களது காதலுக்கு திருமணத்திற்கு ரொம்பவே பக்கபலமாக இருந்தவர் எனது மாமியார். எங்களது திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே எங்களுடன் சினிமாவிற்கு வருவது, ஷாப்பிங் வருவது என எல்லாவற்றிலும் இணைந்து கொள்வார். அது மட்டுமல்ல திருமணத்திற்கு முன்பே அவரது வீட்டில் பல நாட்கள் நான் தங்கி இருக்கிறேன். அந்த அளவிற்கு பெருந்தன்மையான அவர், கொஞ்சம் மாடர்ன் கொஞ்சம் கலாச்சாரம் என கலந்த ஒரு கலவையான பெண்மணி” என்று கூறியுள்ளார்.