புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தமிழில், சசிகுமாரின், 'பிரம்மன்', சி.வி.குமாரின் 'மாயவன்' படங்களில் நடித்தவர் லாவண்யா திரிபாதி. தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கி நடித்து வந்த அவர், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகனும் நடிகருமான வருண் தேஜை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், குறிப்பிட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து, தன்னைப் பற்றியும் தனது குடும்பம் பற்றியும் தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வருவதாக ஹைதராபாத் சைபர் கிரைம் போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: ஒரு குறிப்பிட்ட (அதன் பெயரை குறிப்பிட்டுள்ளார்) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான மற்றும் அவதூறான கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அந்த பக்கத்தில் எனக்கு எதிராக மட்டுமல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக ஆட்சேபனைக்குரிய பதிவுகள் மற்றும் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். எனது தனிப்பட்ட வாழ்க்கை, நற்பெயர் ஆகியவற்றுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலேயே குறிப்பிட்ட நபர் செயல்படுகிறார்.
பல பதிவுகள் மற்றும் கருத்துகளில் ஆபாசமான மொழி மற்றும் எனது குணம் மற்றும் ஒழுக்கத்தை கேள்விக்குட்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அந்த பதிவுகளின் நோக்கமே தீங்கிழைக்கும் வகையிலும், என்னை பொதுவழியில் அவமானப்படுத்தும் வகையிலும் உள்ளது. இன்ஸ்டாகிராம் கணக்கை இயக்கும் நபரை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து சைபர் கிரைம் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகிறார்கள்.




