புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

ஜே பி சினிமாஸ் சார்பில் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிக்கும் படத்தில் முனீஷ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை நித்திலன் சுவாமிநாதனின் உதவியாளர் அசோக் ராம் இயக்குகிறார்.
ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்கிறார், ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, ''பழமையான கேமரா ஒன்றை மையமாக வைத்து பேண்டஸி காமெடி ஜானரில் இப்படம் தயாராகிறது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமாக ஒரு அரங்கம் அமைத்து, அதில் படப்பிடிப்பு நடத்துகிறோம்'' என்றார். மிடில் கிளாஸ் படத்திற்கு பிறகு இந்த படத்தில் முனீஷ்காந்த் கதை நாயகனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.




