பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'பிளாக்மெயில்' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த். போதை மருந்து விவகாரத்தில் கைதாகி உள்ளே சென்று வந்ததால் இந்த நிகழ்ச்சி, புரமோஷனில் அவர் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உள்ள வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் மாதிரி அவரும் படம் ரிலீஸ் ஆக, தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்து இருக்கிறார். அது பற்றி யாருமே பேசவில்லை. அவருக்கு திரையுலகில் கூட பெரியளவில் ஆதரவு இல்லை. அவருக்கு உதவினால், அவருடன் பேசினால் போதை மருந்து விவகாரத்தில் தங்கள் பெயர் வருமோ என்று பயந்து பலர் ஒதுங்கி இருக்கிறார்களாம். இதேபோல் அமீரும் கையில் இருக்கும் படத்தை முடிக்க முடியாமல், புதுப்படங்களை கமிட் செய்ய முடியாமல் தவிக்கிறாராம். வெப்சீரிஸ் மற்றும் சில படங்களில் நடித்து வரும் 'கழகு' கிருஷ்ணாவின் எதிர்காலமும் இந்த வழக்கால் முடங்கி போய் உள்ளது. இந்த விவகாரத்தால் கோலிவுட்டில் பார்ட்டிகள் நடத்தப்படுவது கணிசமாக குறைந்துள்ளது.