கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
மலையாள சினிமாவின் இளம் எடிட்டர் ஷமீர் முகம்மது. 2015ல் வெளிவந்த 'சார்லி' படத்தில் அறிமுகமாகி இந்த வாரம் வெளிவந்த 'நரி வேட்ட' படம் வரையிலும் பணி புரிந்தவர்.
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திலும் முதலில் எடிட்டர் ஆகப் பணிபுரிந்தவர். பின்னர் அந்தப் படத்திலிருந்து விலகியவர். சமீபத்திய பேட்டி ஒன்றில் 'கேம் சேஞ்ஜர்' படம் குறித்து அவர் பேசியவை வைரலாகி உள்ளது.
“ஷங்கர் சார் பணியாற்றும் விதம் எனக்குப் பிடிக்கவில்லை. அது ஒரு 'ஹாரிபில்' அனுபவம். நான் எதிர்பார்த்ததை விட படம் நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. அதனால், அந்தப் படத்திலிருந்து பாதியில் வெளியேறினேன். படத்தின் முதற்கட்ட நீளம் ஏழரை மணி நேரம் இருந்தது. அதை மூன்று மணி நேரமாகக் குறைத்தேன். பின்னர் வேறொரு எடிட்டர் அதை இன்னும் குறைத்தார்.
ஷங்கர் இயக்கத்தில் தமிழில் வந்த 'இந்தியன் 2', தெலுங்கில் வந்த 'கேம் சேஞ்ஜர்' ஆகிய படங்கள் அடுத்தடுத்து பெரிய தோல்வியைத் தழுவியது.
'கேம் சேஞ்ஜர்' படத்திற்குக் கதை எழுதிய கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் பேசும் போது, படத்தின் கதை பல்வேறு எழுத்தாளர்கள் பலமுறை மாற்றப்பட்டது என்று பேசியிருந்தார். தற்போது அப்படத்திலிருந்து விலகிய எடிட்டர் ஷமீர் படம் பற்றியும், ஷங்கர் பற்றியும் விமர்சித்துள்ளார்.
இது தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளத் திரையுலகத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் தரப்பிலிருந்து இதற்கு ஏதாவது பதில் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.