பெருசு,Perusu

பெருசு - பட காட்சிகள் ↓

Advertisement
2.75

விமர்சனம்

Advertisement

தயாரிப்பு : ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம்
இயக்கம் : இளங்கோ ராம்
நடிகர்கள் : வைபவ், சுனில் ரெட்டி, பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனிஷ்காந்த், கருணாகரன், சாந்தினி தமிழரசன், நிஹாரிகா, தீபா சங்கர், தனலட்சுமி, சுவாமிநாதன்.
வெளியான தேதி : 14 .03.2025
நேரம் : 2 மணி நேரம் 15 நிமிடம்
ரேட்டிங் : 2.75/5

கதைக்களம்
தஞ்சாவூர் அருகே ஒரத்தநாடு கிராமத்தில் வைபவ் அப்பா மிகுந்த மதிப்போடு வாழ்ந்து வருகிறார். அவரை பெருசு என ஊர் மக்கள் அழைக்கின்றனர். மூத்த மகன் சுனில் அவரது மனைவி சாந்தினி, வைபவ் அவரது மனைவி நிஹாரிகா மற்றும் அம்மா தனலட்சுமி ஆகியோர் கூட்டு குடும்பமாக இருக்கின்றனர். வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த பெரிசு திடீரென இறந்து விடுகிறார். ஆனால் குடும்பத்தாருக்கு அவரை பார்த்தவுடன் அழுகைக்கு பதிலாக அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த சொல்ல முடியாத விஷயத்தை சரி செய்தால் தான் ஊர் மக்களுக்கு பெருசு இறந்ததை சொல்ல முடியும். அதற்காக ஒட்டு மொத்த குடும்பமே பல்வேறு வேலைகளை செய்கின்றனர். அப்படி என்ன விஷயம் நடந்தது? பெருசை பார்த்து ஏன் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்? இறுதியில் அந்த விஷயம் சரியானதா? இல்லையா? என்பதே படத்தின் மீது கதை.

தமிழ் சினிமாவில் அடல்ட் காமெடி படங்கள் நிறைய வந்துள்ளது. அந்த வகையில் பிளாக் காமெடி படமாக இந்த பெருசு படத்தை இயக்குனர் இளங்கோ ராம் கொடுத்துள்ளார். ஏ சர்டிபிகேட் படம் என்றாலும் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இல்லாமல் ஜாலியாக குடும்பத்துடன் சிரித்து மகிழும் வகையில் படத்தை இயக்குனர் இயக்கியுள்ளது சிறப்பு. குறிப்பாக திரைக்கதை மற்றும் வசனத்தை ரசித்து எழுதி உள்ளார்.

வைபவ் கேஷுவலாக நடித்து உள்ளார். பால சரவணன் உடன் சேர்ந்து வைபவ் அட்ராசிட்டியான காமெடி நடிப்பை கொடுத்துள்ளார். அவரை தூக்கி சாப்பிடும் அளவுக்கு சுனில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். பல காட்சிகளில் அவருடைய முகபாவம் மூலமாகவே சூழ்நிலையை புரிய வைக்கிறார். அதோடு அம்மாவாக நடித்துள்ள தனலட்சுமி அந்த கேரக்டராகவே மாறி உள்ளார். இவர்களோடு முனிஸ்காந்த், கிங்ஸ்லி, கருணாகரன் என மூவரும் காமெடிக்கு துணை நின்றுள்ளனர். சாந்தினி தமிழரசன் மற்றும் நிஹாரிகா இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர். சுவாமிநாதன் வழக்கமான அடல்ட் காமெடியில் கலக்கியுள்ளார்.

சத்ய திலகம் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகிறது. அருண் ராஜ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக உள்ளது.

பிளஸ் & மைனஸ்
ஹாலிவுட் படங்களைப் போல் அழகான ப்ளாக் காமெடி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது சிறப்பு. ஒவ்வொரு கேரக்டர்களும் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளது. அதேபோல் படத்தின் முதல் பாதி மற்றும் கிளைமாக்ஸ் பிளஸ். இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சற்று தடுமாற்றம் தெரிகிறது. சில காட்சிகள் திரைக்கதை ஓட்டத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

பெருசு - நின்னு விளையாடுது

 

பெருசு தொடர்புடைய செய்திகள் ↓

பட குழுவினர்

பெருசு

  • நடிகர்
  • நடிகை
  • இயக்குனர்

மேலும் விமர்சனம் ↓