
ட்ராமா
விமர்சனம்
தயாரிப்பு : டர்ன் ப்ரொடக்ஷன்ஸ் ஹவுஸ்
இயக்கம் : தம்பிதுரை மாரியப்பன்
நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பார்த்தோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி
வெளியான தேதி : 21.03.2025
நேரம் : 1 மணி நேரம் 52 நிமிடம் 13 செகண்ட்
ரேட்டிங் : 2.25/5
கதைக்களம்
விவேக் பிரசன்னா - சாந்தினி தமிழரசன் தம்பதிக்கு குழந்தை இல்லாததால் மனக்கவலையில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அவருடைய நண்பர் ஆனந்த் நாக் உதவுகிறார். அதேபோல் ஆட்டோ டிரைவரான மாரிமுத்து - ரமா தம்பதியின் மகளான பூர்ணிமா ரவி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். அவரை பார்த்தோஷ் காதலித்து வருகிறார். மற்றொருபுறம் கார் மெக்கானிக்கான ஈஸ்வர், அவருடைய நண்பர்கள் மூலம் கார் திருடி விற்று வருகிறார். அதேபோல் பிரதீப் கே.விஜயன் குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இந்த நான்கு விதமான கேரக்டர்களும் ஒரு பிரச்சனையில் இணைகின்றனர் அந்த பிரச்சனை என்ன? இதில் மருத்துவத்திற்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதி கதை.
மருத்துவத்துறை பின்னணியில் ஹைபர் லிங்க் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளின் உச்சமாக ஒரு விஷயத்தை இயக்குனர் இதில் சொல்லி இருக்கிறார். இறுதியில் குழந்தைக்காக பல லட்சங்களை செலவு செய்வதற்கு பதிலாக சமூகத்தில் பெற்றோர் இல்லாமல் தவிக்கும் குழந்தைகளை தத்தெடுத்து கொள்ளலாம் என்கின்ற மெசேஜையும் சொல்லி உள்ளது சிறப்பு.
படத்தில் மைய கேரக்டராக நடித்துள்ள விவேக் பிரசன்னா வழக்கம் போல் ஷட்டிலான நடிப்பை கொடுத்துள்ளார். அவருடைய மனைவியாக நடித்துள்ள சாந்தினி தமிழரசன் தாய் பாசத்திற்காக ஏங்கும் பெண்களின் மனதை பிரதிபலித்துள்ளார். அதேபோல் பூர்ணிமா ரவி மற்றும் பார்த்தோஷ் நடிப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது. அவருடைய கேரக்டர் செம டூரிஸ்ட் ஆக உள்ளது. நண்பனாக வரும் ஆனந்த் நாக் வேறொரு முகத்தை காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டுனராக நடித்துள்ள மாரிமுத்து மற்றும் ராமா நடுத்தர குடும்பத்தில் நிலையை கண்முன் கொண்டு வருகின்றனர். அதேபோல் இன்ஸ்பெக்டராக வரும் சஞ்சீவ், கான்ஸ்டபிள் ஆக வரும் வையாபுரி மற்றும் முதல் அமைச்சராக வரும் நிழல் ரவி என அனைவரும் தங்கள் கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளனர்.
அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஆர்எஸ் ராஜ பிரதாப் இசை ரசிக்கும்படியாக உள்ளது.
பிளஸ் & மைனஸ்
சமீபகாலமாக செயற்கை கருத்தரிப்பு மையம் என்ற பெயரில் மக்களிடம் சிலர் பணத்தை கொள்ளை அடிக்கும் மருத்துவ கும்பல் பற்றி சொல்லியிருப்பது சிறப்பு இருப்பினும் அது குறித்த இன்னும் ஆழமான விவரங்களோடு எடுத்துக்காட்டிருந்தால் ரசிக்கும் படியாக இருந்திருக்கும். அதோடு இதில் சொல்லி இருப்பது போல் அந்த முறையில் குழந்தை கொடுப்பது என்பது லாஜிக்கல் மிஸ்டேக்.
ட்ராமா - சிகிச்சை தேவை