அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

கார்த்தி நடித்துள்ள இரண்டு படங்கள் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள 'வா வாத்தியார்' படத்தின் இந்த வருடப் பொங்கலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படத்தின் டீசரை நவம்பர் மாதமே வெளியிட்டார்கள். ஆனால், தற்போது வரை படம் எப்போது வெளிவரும் என்ற தகவல் இல்லை.
'கங்குவா' படத்தின் படுதோல்விக்குப் பிறகும், 'தங்கலான்' தோல்விக்குப் பிறகும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நிதிச் சிக்கலில் இருப்பதாகத் தகவல். அந்த பஞ்சாயத்துக்களை அவர்கள் முடித்தால் மட்டுமே 'வா வாத்தியார்' படம் எந்த சிக்கலும் இல்லாமல் வர முடியுமாம். அது இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
அதனால்தான் 'சர்தார் 2' படத்தின் புரமோஷனை இப்போது ஆரம்பித்துள்ளதாகச் சொல்கிறார்கள். நேற்று இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் கோடை விடுமுறைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அறிவிப்புத் தேதி வெளியாகலாம்.




