ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
வீரதீர சாகஸ நாயகனாக எம் ஜி ஆர் நடித்து 1951ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் இரண்டு. ஒன்று “சர்வாதிகாரி” மற்றொன்று “மர்மயோகி”. கொடுங்கோள் ஆட்சி நடத்துகின்றாள் ராணி. அடங்கிக் கிடக்கின்றான் மன்னன். மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகின்றான் கரிகாலன். இடையில் மர்மயோகியாக தோன்றி அதர்மத்தை எதிர்த்து ஆவியாக நடமாடுகின்ற ஒரு கதாபாத்திரம். ராணியாக நடிகை அஞ்சலிதேவியும், மக்கள் தலைவன் கரிகாலனாக எம் ஜி ஆரும், மர்மயோகியாக செருகளத்தூர் சாமாவும் நடித்திருந்தனர்.
“நான் குறி வைத்தால் தவறாது, தவறுமானால் குறி வைக்கமாட்டேன்” என்று வசனம் பேசி, சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ராணியின் கழுத்தருகே கட்டாரியை வீசி, எம் ஜி ஆர் பேசிய அந்த வசனம் அந்நாளில் வெகு பிரபலம். 'ஜுபிடர் பிக்சர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதியவர் ஏ எஸ் ஏ சாமி, படத்தை இயக்கியவர் கே ராமனாத். ஆரம்பத்தில் இப்படத்திற்கு “கரிகாலன்” என பெயரிட நினைத்திருந்தது தயாரிப்பு தரப்பு. பின்னர் வரலாற்றுப் படைப்போடு தொடர்புடைய தலைப்பாக இருப்பதாக எண்ணி படத்திற்கு “மர்மயோகி” என் பெயர் வைத்தனர்.
அண்ணாதுரையின் “வேலைக்காரி” திரைப்படத்தை இயக்கியிருந்த ஏ எஸ் ஏ சாமி “மர்மயோகி” திரைப்படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தும், “மந்திரிகுமாரி” திரைப்படத்தின் நாயகன் எம் ஜி ஆர் நடித்திருந்தும் எந்தவித அரசியல் பிரச்சார நெடியும் இல்லாமல் படத்தை வெகு நேர்த்தியாக இயக்கியிருந்தார் இயக்குநர் கே ராம்னாத். படத்தைப் பார்த்த அன்றைய மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரிய அதிகாரிகள் படத்தில் ஆவி உருவம் இடம் பெற்றதை வைத்து இப்படத்திற்கு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என சான்றிதழ் வழங்கியது.
இருப்பினும் இத்திரைப்படம் எம் ஜி ஆரை ஒரு அதிரடி ஆக்ஷன் நாயகனாக காட்டி, அவருடைய திரைப்பயணத்தின் வேறொரு பரிமாணமாக அமைந்திருந்ததோடு, மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்து, 1951ன் ஒரு ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அறியப்பட்டதுதான் இந்த “மர்மயோகி”.