இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள கூலி திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் சுமார் 120 கோடி வரை விலைக்கு வாங்கியுள்ளது. ஒரு தமிழ் திரைப்படம் வெளியாகி 4 வாரம் கழித்து ஓடிடி தளங்களில் வெளியாகும் என்பதே தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிகழ்வாக கருதப்படுகிறது.
அந்த வகையில் கூலி திரைப்படத்தை படம் வெளியாகி 4 வாரம் கழித்து ஒளிபரப்பலாமா அல்லது 8 வாரங்கள் கழித்து ஒளிபரப்பலாமா என்ற யோசனையில் தயாரிப்பு நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் வட மாநிலங்களை பொறுத்தவரை திரையரங்கில் வெளியாகி 8 வாரம் கழித்து தான் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகும். அப்படி வெளியிடப்படும் படங்கள் மட்டுமே வட மாநிலங்களில் உள்ள மல்டிப்ளக்ஸ் அரங்கில் வெளியிடப்படும். அந்த வகையில் கூலி திரைப்படத்தை வெளியிடுவதில் ஒரு சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் படக்குழு யோசனையில் உள்ளதாகவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகம் உள்ளதால் திரையரங்கில் 8 வாரங்கள் ஓடிய பிறகு பார்த்து கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் படக்குழு இருப்பதாக கூறப்படுகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளது. அதேசமயம் பட ரிலீஸை தீபாவளி அல்லது ஆயுத பூஜை அன்று வெளியிடலாமா என்ற யோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.