அதிர்ந்து போனேன் : மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல் | இயக்குனர் பாரதிராஜா மகன், நடிகர் மனோஜ் பாரதி காலமானார் | பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் - பவன் கல்யாண் | ரன்பீர் கபூருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் | பாஸ் என்ற பாஸ்கரன் இரண்டாக பாகம் எப்போது? : இயக்குனர் ராஜேஷ் தகவல் | வருண் தவானுடன் ஆற்றில் குதித்த பூஜாஹெக்டே | எமி ஜாக்சனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது | ''மோகன்லால், விக்ரமுக்கு ஒரு ஹிட்; எனக்கு ரெண்டு ஹிட்'': மகிழ்ச்சியில் சுராஜ் வெஞ்சாரமூடு | எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு |
பூலான் தேவியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'பண்டிட் குயின் ' படத்தில் நடித்து புகழ்பெற்றவர் சீமா பிஸ்வாஸ். தொடர்ந்து பாலிவுட் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வருகிறார். 2003ம் ஆண்டில் வெளியான 'இயற்கை' படம் மூலம் தமிழ் திரையுலகிலும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, 2006ல் வெளியான 'தலைமகன்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸில் நடித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : புராணங்கள், சடங்குகள் என இந்த வெப்சீரிஸின் கதை மிகவும் சுவாரஸ்யமானது. வில்லனுக்கு தகவல் கொடுத்து அடையாளம் காட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். தென்னிந்திய மொழி படங்கள் மகத்தான சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக மலையாளம், தமிழ் படங்களில் வித்தியாசமான கதைகளை கையாளுகிறார்கள். புதிய புதிய கேரக்டர்களை உருவாக்குகிறார்கள். அந்த கேரக்டர்களில் நானும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். என்றார்