எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா |
எம்ஜிஆரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ராஜகுமாரி. இந்த படத்தை ஜூபிடர் பிலிம்ஸ் சோமு தயாரித்தார். சரியான வேலை இன்றி இருக்கும் தனது ஸ்டூடியோ ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சாமியை சின்ன பட்ஜெட்டில் நமது ஊழியர்களை கொண்டே தயாரிக்க கூடிய வகையில் ஒரு கதையை எழுத சொன்னார். அதுதான் ராஜகுமாரி.
கதையை படித்த சோமு, கதை பிரமாதமாக இருக்கிறது. இந்த கதையை நம்மால் மட்டும் எடுக்க முடியாது, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்து நாயகனாக பி.யு.சின்னப்பாவையும், நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் நடிக்க வைக்கலாம் என்றார். அவரே படத்திற்கு 'ராஜகுமாரி' என்று பெயரும் வைத்தார்.
ஆனால் இயக்குனர் சாமி 'ரிஸ்க் எடுக்க வேண்டாம் நாமே படத்தை எடுத்து விடலாம்' என்று உறுதி அளித்து பட வேலைகளை ஆரம்பித்தார். வாட்டசாட்டமான அதே நேரத்தில் அழகான ஹீரோவை தேடினார். அப்போது அவர் 'ஸ்ரீமுருகன்' என்ற படத்தை பார்த்தார். அதில் எம்ஜிஆர் சிவதாண்டவம் ஆடியிருந்தார், அவரே ஹீரோ என்று முடிவு செய்தார் சாமி. நாயகியாக தெலுங்கு சினிமாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மாலதி நடித்தார்.
ஜூபிடர் பிலிம்சுக்கு பால் சப்ளை செய்து கொண்டிருந்த எம்.எம்.ஏ சின்னப்பா தேவர் முக்கிய கேரக்டருக்கு தேர்வானார். இவர்களுடன் எம்.என். நம்பியார், எம்.ஆர். சுவாமிநாதன், டி.எஸ். பாலையா, 'புலிமூட்டை' ராமசாமி, கே.மாலதி, தவமணி தேவி உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
படத்தை 11 ஆயிரம் அடியில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் முடியவில்லை. பட்ஜெட் எகிறியது. எடுத்தவரை படத்தை போட்டுபார்த்த தயாரிப்பாளர் சோமுவிற்கு படம் திருப்தி தரவில்லை. குறிப்பாக எம்ஜிஆர் பெண்களுக்குரிய அழகுடன் இருப்பதாக கருதினார்.
இன்னும் 7 ஆயிரம் அடி எடுத்தால்தான் படம் நிறைவடையும் என்கிற நிலை. இதனால் தயாரிப்பாளர் சோமு எல்லோரையும் அழைத்து "இன்னும் 4 ஆயிரம் அடிக்குள் படத்தை முடித்து விடுங்கள். அதன்பிறகும் படம் எனக்கு திருப்தி தராவிட்டால் படத்தை வெளியிடாமல் தீயிட்டு கொழுத்தி விடுவேன்" என்றார்.
அதன்பின்னர் ஒரு வழியாக படம் எடுத்து முடிக்கப்பட்டதும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் சோமு அசந்து விட்டார். இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதும், எம்ஜிஆர் ஹீரோ ஆனதும் வரலாறு.