பிளாஷ்பேக்: நிரந்தரத் திரைக்கலைஞர்களைத் தந்த “நிழல்கள்” | சிவகார்த்திகேயனின் 'மதராஸி' படத்தை 23 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்! | கோலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்த ரவி மோகன் - பாடகி கெனிஷா! | கந்தன் கருணை, ஷாஜகான், வேட்டையன் - ஞாயிறு திரைப்படங்கள் | 'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் |
பிரித்விராஜ் சுகுமாரன் நடித்து, இயக்கும் படம் 'எல் 2 எம்புரான்'. இதில் மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த மாதம் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகிறது. மலையாளத் திரையுலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படத்திற்கு ஏற்பட்ட கடைசிகட்ட சிக்கல் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டு வெளியீடு உறுதி செய்யப்பட்டது. படத்தை உலக அளவில் கொண்டு போய் சேர்க்க படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
'ஐமேக்ஸ்' வடிவிலும் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இது குறித்து மோகன்லால், “மலையாளத் திரையுலகத்திலிருந்து ஐமேக்ஸில் வெளியாகும் முதல் படமாக 'எல் 2 எம்புரான்' இருக்கும் என்பதை அறிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த பெருமை. ஐமேக்ஸுக்கும் மலையாள சினிமாவுக்கும் இடையிலான நீண்ட மற்றும் சிறப்பான இணைப்பின் தொடக்கமாக இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். 27 மார்ச் 2025ம் தேதி முதல் உலகெங்கிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஐமேக்ஸ் தியேட்டர்களில் இந்த அற்புதக் காட்சியைப் பாருங்கள்,” என்று குறிப்பிட்டுளளார்.