ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
அமெரிக்கா என்றாலே ஹாலிவுட் படங்களும், வளவளப்பான சாலைகளும்தான், வானுயர்ந்த கட்டிடங்களும்தான் நினைவுக்கு வரும், அங்குள்ள மக்கள் வாழும் சொகுசான வாழ்க்கை குறித்து நினைப்போம். ஆனால் அமெரிக்காவில் பிறநாட்டு குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்து 'சிட்டி ஆப் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் படமாக தயாரித்திருக்கிறார் இந்தியரான விவேக் ராமசாமி. இயக்கி இருப்பவர் மோஹித் ராமச்சந்தானி.
ஆரி லோப்ஸ், ரெனாட்டா வேகா, ஆல்பர்ரோ காஸ்ட்ரோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லிசா கர்னாட் இசை அமைத்துள்ளார், அலஜெண்ட்ரோ காஸ்ட்ரோ ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியான இந்தப் படம் இந்தியாவில் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வெளியாகிறது.
ஆஸ்கர் விருது போட்டியில் இடம்பெற்ற இந்த படம் மெக்சிகோ நாட்டில் இருந்து கடத்தி வரப்படும் ஜீசஸ் என்ற சிறுவன் கொத்தடிமை தொழிலாளர் ஆக்கப்படுவதும், அதிலிருந்து அவர் மீள்வதும்தான் படத்தின் கதை.
இதுகுறித்து தயாரிப்பாளர்களில் ஒருவரான ரூபர் பார்கர் கூறியதாவது: அமெரிக்க நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்திய நாட்டை பற்றி வெளிநாடுகளில் படமாகவோ டாக்குமெண்ட்ரிகளாகவோ காட்டும்பொழுது அதை ஒரு வறுமையின் சின்னமாகவும் பசிக்கொடுமையில் குழந்தைகள் தவிப்பதாகவும் குடிசை பகுதி பிச்சைக்காரர்கள் என்று தான் படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். அதேப்போல் அமெரிக்காவிலும் இன்னொரு மறுபக்கம் இருக்கிறது என்பதை சிட்டி ஆப் ட்ரீம்ஸ் உலகுக்கு உணர்த்தி இருக்கிறது.
பல போராட்டத்திற்கு பிறகு இந்த படம் அமெரிக்காவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உலகின் சொர்க பூமி என்று கூறப்படும் அமெரிக்காவில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறது என்று அங்குள்ள பிரபல ஹீரோக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். அந்த படம் தற்போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழுவதும் வெளியிடப்பட இருக்கிறது. என்றார்.