நடிகர் ஆர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் பெரிதளவில் வெற்றி பெறவில்லை. தற்போது ரன் பேபி ரன் படத்தின் இயக்குனர் ஜியோன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா தனது புதிய படத்தில் நடித்து வருகின்றார்.
இதனை மார்க் ஆண்டனி, எனிமி ஆகிய படங்களை தயாரித்த வினோத் தயாரிக்கிறார். லூசிபர் படத்தின் கதையாசிரியர் முரளி கோபி கதை எழுதியுள்ளார். கடந்த வாரத்திற்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கியது. இந்த நிலையில் இத்திரைப்படம் சுமார் ரூ. 70 கோடி பொருட்செலவில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதான் ஆர்யா சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்று சொல்கிறார்கள்.