50வது நாளில் 'டூரிஸ் பேமிலி' | பி.எம்.டபிள்யூ எக்ஸ்-1 காரை வாங்கிய நடிகர் விதார்த்! | தனி விமானம் வாங்கினாரா சின்னத்திரை நடிகை? | சூர்யா 45வது படத்தின் டைட்டில் 'கருப்பு': போஸ்டர் வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி! | கன்னடத்தில் அடி எடுத்து வைத்த 'அனிமல்' பட நடிகர் உபேந்திரா | 'தி ராஜா சாப்' டீசரை விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஹைதராபாத் போக்குவரத்து போலீஸ் | அடுத்த தலைமுறைக்கு இதைத்தான் கொடுக்க போகிறோமா ? நடிகை மஞ்சிமா காட்டம் | மம்முட்டி நலமாக இருக்கிறார் ; ராஜ்யசபா எம்பி வெளியிட்ட தகவல் | அமீர்கான் படக்குழுவினரை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்திய ஷாருக்கான் | கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி |
தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். இதுதவிர ஏராளமான படங்களையும் தயாரித்துள்ளார். இந்த நிறுவனத்திற்கு தனுஷ் ஒரு படம் பண்ணி தருவதாக ஏற்கனவே ஒப்பந்தமாகி அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தனுஷ் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கும் படம் நடித்து தரவில்லை. இதுதொடர்பாக ஏற்கனவே தமிழ் திரைப்பட சங்கங்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தனுஷ் படம் நடிப்பதாக உறுதியானது. ஆனாலும் அதன்பின்னரும் தனுஷ் படம் நடக்கவில்லை.
இந்நிலையில் பைவ் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி, பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கவனத்திற்கு என குறிப்பிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛6 ஆண்டுகளுக்கு முன் தனுஷ் எங்கள் நிறுவனத்திற்கு படம் பண்ணுவதாக சொல்லி முன் பணமும் பெற்றார். ஆனால் இப்போது வரை கால்சீட் தரவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோதே டான் பிக்சர்ஸ் ஆகாஷ், "இட்லிகடை" படப்பிடிப்பு நடக்க வேண்டும், "மேலிடத்து உத்தரவு" என்று கூறியதை மறந்தீரோ?
அக்., 30ம் தேதிக்குள் எங்கள் நிறுவனத்திற்கு நியாயம் வாங்கித் தருவதாக தாங்கள் எங்கள் சங்கத்தில் உறுதியளித்தீர்கள். நீதி வழங்கத்தானே சங்கங்கள் உள்ளன??? தங்களின் அரசியல் குறுக்கீட்டால் இன்று வரை எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. தொழிலாளர் வலியை உணர்ந்த தாங்கள் வட்டிக்கு பணம் வாங்கி படமெடுக்கும் தயாரிப்பாளர்களின் வலியை எப்போது உணர்வீர்கள். தயாரிப்பாளர்களின் நலன் காக்க எங்கள் சங்கம் எடுக்கும் முயற்சிகளில், அரசியல் கலக்காமல் ஒத்துழைப்பு தருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அக்டோபர் 30ம் தேதிக்குள் நியாயம் கிடைக்கும் என்று என்னிடம் கூறிவிட்டு இன்று கதிரேசன் பிரச்னை செய்கிறார் என்று சொல்வது தங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. தயாரிப்பாளரின் நியாயம் அறியாமல் எப்படி உங்களால் இப்படி பொதுத்தளத்தில் மனசாட்சியின்றி பேச முடிகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் கவனத்திற்கு, அன்று எங்கள் நிறுவனம் வைத்த கோரிக்கை தங்களிடமே.... தாங்கள் எடுக்கும் முடிவு அனைத்து தயாரிப்பாளர்களின் நலன் கருதியே... எங்களது வலியை உணர்ந்து விரைவில் நியாயம் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.