செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சிவபெருமானின் பக்தரான கண்ணப்ப நாயனாரின் வாழ்க்கையை தழுவி தெலுங்கில் உருவாகி உள்ள பிரமாண்ட சரித்திர படம் ‛கண்ணப்பா'. நடிகர் மோகன் பாபுவின் மகன், நடிகர் விஷ்ணு மஞ்சு தயாரித்து, கண்ணப்பராக நடித்துள்ளார். பிரீத்தி முகுந்தன், சரத்குமார், ராகுல் ராமகிருஷ்ணா, பிரம்மானந்தம், மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இவர்கள் தவிர்த்து மோகன்லால், பிரபாஸ், அக் ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோர் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். தெலுங்கு மட்டுல்லாது தமிழ், கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. ஏப்., 25ல் படம் ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்து இருந்தனர். ஆனால் தற்போது ரிலீஸ் தள்ளி போவதாக அறிவித்துள்ளனர்.
இதுபற்றி விஷ்ணு மஞ்சு வெளியிட்ட அறிக்கையில், ‛‛கண்ணப்பா வெளியீடு தள்ளி வைப்பிற்காக முதலில் வருத்தத்தை பதிவு செய்கிறேன். கண்ணப்பா படம் ஒரு நம்பமுடியாத பயணம். அதை உயர் தரத்தில் கொடுக்க வேண்டும் என நினைக்கிறோம். படத்தில் விஎப்எக்ஸ் பணிகள் முடிய தாமதம் ஆகிறது. இந்த படத்திற்காக எங்கள் குழுவினர் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர். விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.