வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு | சர்தார் 2 படத்தில் உள்ள சிக்கல் | பிளாஷ்பேக்: எழுத்தாளருக்கான தேசிய விருது பெற்ற முதல் நடிகை | இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் |
அதர்வா நடித்த ஈட்டி, ஜிவி பிரகாஷ் நடித்த ஐங்கரன் ஆகிய படங்களை இயக்கியவர் ரவி அரசு. அதன் பின்னர் சிவராஜ் குமாரை வைத்து 'ஜாவா' என்ற படத்தை இவர் இயக்கவிருத்தார். ஆனால் சிவராஜ் குமாரின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அந்த படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனால் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் இறங்கினார். அதன்படி நடிகர் விஷாலிடம் ஒரு கதை சொல்லி ஓகே பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் இந்த படம் உருவாக உள்ளது. இதை விஷாலே அவரது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரிக்கவும் செய்கிறார். இப்போது இதில் கதாநாயகியாக நடிக்க துஷாரா விஜயன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள்.
சார்பட்டா பரம்பரை, ராயன், வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். கடந்தவாரம் விக்ரம் உடன் இவர் நடித்த வீர தீர சூரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது விஷால் உடன் இணைந்து நடிக்க போகிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.