அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் | வதந்தி 2 வெப்சீரிஸில் இரண்டு நாயகிகள் | தர்பார் தோல்வி குறித்து ஓபன் ஆக பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் | தமிழில் ரீமேக் ஆகும் கன்னட படம் 'சூ ப்ரம் சோ' | சர்ச்சில் ரொமான்ஸ்: ஜான்வி கபூர் படத்திற்கு எதிர்ப்பு | பிளாஷ்பேக்: ரீ என்ட்ரி வாய்ப்புகளை மறுத்த சுவலட்சுமி | ‛கேங்ஸ்டர்' ஆக ‛லெஜண்ட்' சரவணன் | ஆண்ட்ரியா படத்தை பார்க்க நீதிபதிகள் முடிவு |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்துள்ளார் அஜித் குமார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். இதில் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ், பிரசன்னா, பிரபு, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன.
இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக இந்த படத்திலிருந்து ஒவ்வொரு பாடலாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.