ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரீ லீலா, கன்னட சினிமாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அதன் பின்னர் தெலுங்கில் மகேஷ் பாபு, ரவி தேஜா, ராம் பொத்தினேனி, நிதின், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிஸியான கதாநாயகியாக வலம் வருகிறார்.
சமீபத்தில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார். தற்போது ஸ்ரீ லீலா தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அனுராக் பாசு இயக்கத்தில் உருவாகும் புதிய ஹிந்தி படத்தில் கார்த்திக் ஆர்யன் உடன் இணைந்து கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கின்றார். இப்படத்தை டி சீரியஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இவ்வருட தீபாவளிக்கு இப்படம் திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர்.