என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தெலுங்கில் ரவி தேஜா நடித்து வெளிவந்த 'மிஸ்டர் பச்சான்' படத்தின் மூலம் பிரபலமான நடிகை பாக்ய ஸ்ரீ போர்ஸ். தற்போது ராம் பொத்தினேனி, துல்கர் சல்மான் போன்ற நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவாகிறது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இது சூர்யாவின் 46வது படமாக உருவாகிறது.
இப்படம் இந்தியாவில் முதல் இஞ்சின் எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த கதையில் உருவாக உள்ளதாம். அதன் காரணமாக இந்த படத்துக்கு '760 சிசி' என்று தலைப்பு வைப்பதற்கு இயக்குனர் வெங்கி அட்லூரி பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.