ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

மும்பை : ரூ.60 கோடி மோசடி வழக்கில் ஷில்பா ஷெட்டி மற்றும் தொழிலதிபர் கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அடுத்து நடிகைகள் ஏக்தா கபூர், பிபாஷா பாசுவை விசாரிக்க மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ் குந்த்ரா, நடிகர் அக்ஷய் குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் பிரபலங்களை அடிப்படையாகக் கொண்ட டெலிஷாப்பிங் சேனல் ஆகும்.
பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் தொடர்பான கடன் மற்றும் முதலீட்டு ஒப்பந்தத்தில் ஒரு தொழிலதிபரிடம் ரூ.60.4 கோடி மோசடி செய்ததாக ஷில்பா ஷெட்டி, குந்த்ரா உள்ளிட்ட நபர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த மோசடி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணம் குறித்த தகவலுக்காக, மேலும் சில பாலிவுட் பிரபலங்களை விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது குறித்து காவல்துறை பொருளாதார குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
இந்த நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக அவர்கள் பெற்ற பணம் எவ்வளவு என்பது குறித்த விவரங்களை ஏக்தா கபூர், நேஹா துபியா, பிபாஷா பாசு ஆகியோரிடமிருந்து பெற முடிவு செய்துள்ளோம்.
நிறுவனத்தின் நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக புகார் இருப்பதால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் ஆராயப்படுகிறது. ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா என்பதை ஆராய்வது இப்போது முக்கியம். ஆகவே பணம் எவ்வாறு வழங்கப்பட்டது என்பதையும் நாங்கள் அவர்களிடம் கேட்போம். விரைவில் அவர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படும்.
இவ்வாறு பொருளாதார குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.