ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

உலக அளவில் பெருமை மிகுந்த திரைப்பட விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் திரைப்பட விருதுகள். 2026ம் ஆண்டு நடைபெற உள்ள 98வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் விழாவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள 'ஹோம்பவுண்ட்' திரைப்படத்தைத் தேர்வு செய்துள்ளனர். சிறந்த சர்வதேசத் திரைப்பட விருதுக்கான பிரிவில் அந்தப் படம் கலந்து கொள்ளும்.
இதுகுறித்து தேர்வுக்கான தலைவர் என் சந்திரா கூறுகையில், “இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதில் கலந்து கொள்ள பல மொழிகளிலிருந்து 24 படங்கள் போட்டியிட்டன. அவற்றில் ஒன்றைத் தேர்வு செய்தது சிரமமான ஒன்றாக இருந்தது. நாங்கள் நீதிபதிகள் அல்ல, கோச்கள். நாங்கள் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்வதில் இருந்தோம்,” என்றார்.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், எடிட்டர்கள், பத்திரிகையாளர்கள் என 12 பேர் அடங்கிய குழு அந்தத் தேர்வில் இருந்தனர்.
நீரஜ் கய்வான் இயக்கத்தில் கரண் ஜோகர், அதார் பூனாவாலா தயாரிப்பில் உருவான 'ஹோம்பவுண்ட்' திரைப்படத்தில் இஷான் கட்டர், விஷால் ஜெவாத்வா, ஜான்வி கபூர் மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்த வாரம் செப்டம்பர் 26ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
வட இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தில் நடக்கும் கதை. சிறு வயது முதலே சிறந்த நண்பர்களான ஷோயிப் (இஷான் கட்டர்), ஒரு முஸ்லிம், மற்றும் சந்தன் (விஷால் ஜெத்வா), ஒரு தலித், ஆகியோர் வறுமை மற்றும் பாகுபாட்டிலிருந்து தப்பிக்க அரசு வேலைகளைப் பெற வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். போலீஸ் வேலையில் சேர்வது தங்களுக்கு கண்ணியத்தை அளித்து பாரபட்சத்திலிருந்து பாதுகாக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அவர்களின் விண்ணப்பங்களுக்கு ஒரு வருடம் கடந்தும் எந்த பதிலும் வராததால் அவர்களின் பயணம் நிச்சயமற்றதாக மாறுகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக சொல்லும் படம் இது.