பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் | வா வாத்தியார் : கை கொடுக்காமல் போன கார்த்தி | சாந்தனு, அஞ்சலி நாயர் நடிப்பில் ‛மெஜந்தா' | பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! |

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள 'ஸ்பிரிட்' படத்திலிருந்து ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே சில மாதங்களுக்கு முன்பு நீக்கப்பட்டார். அதிக சம்பளம், குறைந்த மணி நேர வேலை, நிறைய உதவியாளர்கள் என அவர் 'டிமாண்ட்' அதிகமாக இருந்தது என தகவல் வெளியானது. தற்போது 'கல்கி 2898 ஏடி' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும் தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். 'ஸ்பிரிட், கல்கி 2898 எடி 2' ஆகிய இரண்டு படங்களிலிருந்து நீக்கப்பட்டது குறித்து எந்தவிதமான விளக்கத்தையோ பதிலையோ தீபிகா அளிக்கவில்லை. அதேசமயம், ஷாரூக்கான் நடிக்க உள்ள 'கிங்' படத்தில் இணைந்தது குறித்து நேற்று ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், “ஓம் ஷாந்தி ஓம்" படப்பிடிப்பின் போது கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதை உருவாக்கும் மனிதர்களும், அதன் வெற்றியை விட மிக முக்கியம் என்று அவர் எனக்கு முதல் பாடமாக கற்பித்தார். நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்த கற்றலை பின்பற்றி ஒவ்வொரு முடிவையும் எடுத்து வந்திருக்கிறேன். அதனால்தான், நாங்கள் ஒன்றாக எங்கள் ஆறாவது படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?,” என ஷாரூக்கானை 'டேக்' செய்து குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவு 'ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி' குழுவினருக்கான மறைமுகமான பதிலாகவும் பார்க்கப்படுகிறது.