மஞ்சு வாரியரின் அதிகாலை ஸ்கூட்டி பயணமும் குதிரையேற்ற பயிற்சியும் | தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்ற சில மணி நேரத்தில் நடிகர் விஷால் வைத்த கோரிக்கைகள் | நயன்தாரா எனக்கு அக்கா... ஏன்னா? சென்னையில் ஸ்ரீலீலா சொன்ன விஷயம் | சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் முதல்வர் விஜய் | எங்களுக்கு அழைப்பு வரலை: சினிமா சங்கங்கள் வருத்தம் | நடிகைகளுக்கு சிபாரிசு: எஸ்கேப் ஆகும் உச்ச நடிகர் | பார்த்தால் வில்லன் பழகினால் குழந்தை.. மைம் கோபி | முதல்வராக பொறுப்பேற்ற விஜய்; விழாவில் பங்கேற்ற திரைப்பிரபலங்கள் | ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு |

ராஞ்சனா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். இத்திரைப்படம் முழு ஹிந்தி படமாக மட்டும் உருவாகியுள்ளது. ஆனால், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபுதேவா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தனுஷ், பிரபுதேவா இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.