பாலியல் புகார் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு | கடுவாவுக்கு யு/ஏ சான்றிதழ் ; சிக்கலின்றி வெளியாகிறது | மாமன்னன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வடிவேலு | அடேங்கப்பா... 800 தியேட்டர்களில் வெளியாகும் 'தி லெஜண்ட்' | மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்கும் தனுஷ் | உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி” | சிரஞ்சீவி பெயரில் தவறு செய்த 'காட்பாதர்' குழு | டி.ராஜேந்தர் பூரண குணமடைந்தார் : அமெரிக்காவில் ஒரு மாதம் ஓய்வு | சமந்தாவின் இன்ஸ்டா முடக்கப்பட்டதா? | வெந்து தணிந்தது காடு - இசை விழா ஆகஸ்ட்டில் நடைபெறுகிறது |
மும்பை: என் கணவர் அப்பாவி; ஆபாச படங்கள் தயாரிப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கிய ஷில்பா ஷெட்டி, தமிழில் குஷி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா; தொழில் அதிபர். சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அவற்றை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து, கோடி கோடியாய் பணம் சம்பாதித்த புகாரில் ராஜ் குந்த்ரா உட்பட 11 பேரை, மும்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படங்கள் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து ஷில்பா ஷெட்டியிடம் போலீசார் நேற்று விசாரித்தனர். அப்போது அவர், என் கணவர் அப்பாவி; ஆபாச படம் தயாரிப்பில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆபாச படம் வெளியிடப்பட்ட செயலியை பிரிட்டனில் உள்ள என் கணவரின் மைத்துனர் பிரதீப் பக் ஷி தான் நடத்தி வந்தார். ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விபரங்கள் எதுவும் எனக்கு தெரியாது, என்றார்.