குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா இரண்டு மாதங்களுக்கு முன்பு 'ஆபாசப்பட விவகாரம்' தொடர்பாக கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று தான் அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. 50000 ரூபாய் ஜாமீன் தொகை மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பல பெண்களை வைத்து ஆபாசப் படங்களை எடுத்து அவற்றைப் பார்ப்பதற்கென்று தனியாக மொபைல் ஆப் நடத்தியதாக ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் நீதிமன்றத்தில் அவர் மீது 1400 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர் போலீசார். இந்த வழக்கில் அவர்தான் முக்கியக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்த வழக்கில் தன்னை பலியாடு ஆக்கிவிட்டதாக ராஜகுந்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் கிடைத்த பிறகு ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சீன-அமெரிக்க மாடர்ன் ஆர்க்கிடெக்ட் ரோஜர் லீ சொன்னதாக, “மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளது,” என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி விவகாரத்து செய்யலாம் எனத் தகவல் வெளியான நிலையில் ஷில்பாவின் இந்தப் பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜ் குந்த்ரா சில மணி நேரங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியில் வந்தார் என மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.