கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது |
பத்து வருடங்களுக்கு முன்பு பாலிவுட்டின் கனவு கன்னிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி, பிரபுதேவாவுடன் ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இந்தநிலையில் சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்ததாக சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார் ராஜ் குந்த்ரா.
ஆரம்பத்தில் கணவர் என்பதால் அவர் மீது எந்த தவறும் இல்லை என்பது போல மழுப்பியபடியே பேச ஆரம்பித்த ஷில்பா ஷெட்டி, ஒருகட்டத்தில் கணவருக்கு வக்காலத்து வாங்குவதை நிறுத்திவிட்டார். மேலும் இது பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரியவும் ஷில்பா ஷெட்டி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து தனக்குத்தானே ஊக்கம் கொடுத்துக் கொள்ளும் விதமாக சோஷியல் மீடியாவில் அவ்வபோது தத்துவ முத்துக்களை உதிர்த்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. அப்படி சமீபத்தில் கூட, “நாம் எடுத்த பல மோசமான முடிவுகளையும், பல தவறுகளையும், நண்பர்களை காயப்படுத்தியதையும் பற்றி அலசி ஆராய்வதிலேயே நிறைய நேரங்களை செலவிட்டு விடுகிறோம்.. எவ்வளவுதான் அலசினாலும் நம்மால் கடந்தகாலத்தை மாற்ற முடியாது. ஆனால் எந்த ஒருவராலும் பின்னோக்கி போக முடியாவிட்டாலும் கூட, புதிய ஆரம்பத்தை உருவாக்க முடியும். யார் ஒருவரும் இப்போது கூட புதிய வாழ்க்கையை துவங்கி அதற்கு ஒரு நல்ல முடிவையும் தர முடியும்..” என கூறியுள்ளார் ஷில்பா ஷெட்டி.