ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தின் டப்பிங் தொடங்கியது | சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!! | வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்! | சர்ச்சை எதிரொலி! ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்! | ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி | ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி | வேட்டையன் டைட்டில் அதிருப்தி ; ரசிகர்களிடம் ராணா சமாளிப்பு | 6வது வாரத்தில் 'தி கோட்', 4வது வாரத்தில் 'லப்பர் பந்து' | கிராமி விருது தேர்வில் ஆடுஜீவிதம் வெளியேறியது ஏன் ? ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம் |
இந்தி சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி படத்திலும் நடித்துள்ளார். ஷில்பா ஷெட்டி கடந்த 2019ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா மும்பை போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார். இது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் அவருக்கு தண்டனை கிடைப்பது உறுதி என்று கூறப்பட்டு வருகிறது. ராஜ் குந்த்ராவை ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், ராஜ்குந்த்ராவுடன் தான் சேர்ந்து வசித்து வரும் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன
ராஜ் குந்த்ராவும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து வியான் இண்டஸ்ட்ரீஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதன் மூலம் பலதரப்பட்ட தொழில்களை செய்து வந்தனர். இந்நிறுவனத்தில் முதலீடு செய்த தொழிலதிபர் ஒருவர், தற்போது தன்னை ஷில்பா ஷெட்டியும், ராஜ் குந்த்ராவும் சேர்ந்து 41 லட்ச ரூபாய் அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ரோகிதாஸ் என்பவர்தான் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது டெல்லி போலீசில் புகார் செய்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது, "உமேஷ் கோயங்கா என்பவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்தபோது ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய போட்டியை காண என்னை அழைத்தார். போட்டியை காண சென்ற இடத்தில் வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என்று அந்த நிறுவனத்தை பற்றி உயர்வாக கோயங்கா எடுத்துக் கூறினார். 2018-ம் ஆண்டு ராஜ் குந்த்ராவும் என்னை ஓட்டல் ஒன்றில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து ரூ.41.33 லட்சத்தை வியான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தேன். ஆனால் சொன்னபடி அவர்கள் முதலீட்டிற்கு லாபம் கொடுக்கவில்லை. கம்பெனியின் பங்குகளும் சரிந்துவிட்டன" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது ரோகிதாஸ் டெல்லி கோர்ட்டில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் இது குறித்து கூறியதாவது, "எனது மனுதாரரை ராஜ் குந்த்ரா திட்டமிட்டு முதலீடு செய்யவைத்து அதனை தன்னுடைய சுயலாபத்திற்காக பயன்படுத்தியுள்ளார். மோசடி செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அவர்கள் முதலீடுகளை பெற்றுள்ளனர். எனவே அவர்களை கோர்ட்டிற்கு அழைத்து தக்க தண்டனை வழங்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கெனவே ஆபாச வீடியோ சிக்கலில் சிக்கி இருக்கும் ராஜ் குந்த்ராவிற்கு இந்த வழக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.