ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். கடந்த பல மாதங்களாக கார் பந்தயங்களில் ஈடுபட்டு வரும் அஜித், பிப்ரவரி மாதத்தில் இருந்து 64வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அதனால் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளில் அவர் ஈடுபட்டு வந்ததோடு இப்படத்தை தயாரிக்க சில நிறுவனங்களிடத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில் தற்போது அஜித் 64 வது படத்தை ஏகே என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்த படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுங்கரா தயாரிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனம் தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் உள்பட 15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.