‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்துள்ள 'வித் லவ்' படத்தை அவரின் உதவி இயக்குநர் மதன் என்பவர் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். சவுந்தர்யா ரஜினி அவரின் ஜியான் பிலிம்ஸ் மற்றும் டூரிஸ்ட் பேமிலி படத்தின் இணை தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலன் அவரின் எம்.ஆர்.பி எண்டெர்டெயிமென்ட் நிறுவனங்களின் மூலம் இணைந்து தயாரித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். பிப்ரவரி 6ம் தேதியன்று திரைக்கு வருகிறது. சமீபத்தில் வெளியான இதன் டிரைலர் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இப்படம் 2 மணி நேர 21 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாராகியுள்ளது.