பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

விஜய் நடிப்பில் ஜனநாயகன் படத்தை இயக்கி உள்ள எச்.வினோத் இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு தனுஷை வைத்து இயக்குவதற்கு தயாரானார். ஆனால் திடீரென்று விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தனுஷ் படத்தை தள்ளி வைத்துவிட்டு ஜனநாயகனில் இறங்கினார் எச்.வினோத். தற்போது அந்த படம் சென்சார் பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் தனுஷை இயக்குவதற்கு அவரை தொடர்பு கொண்ட போது, தற்போது ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, மாரி செல்வராஜ் என 3 படங்களில் நடிக்க கால்சீட் கொடுத்து விட்டதாக கூறியிருக்கிறார். அதனால் தற்போது மேலும் இரண்டு ஹீரோக்களிடம் கால்சீட் கேட்டு வரும் எச்.வினோத், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் தயாராகி வருகிறார்.